×

கோடை கால இயற்கை சுற்றுலா * 100 மாணவ – மாணவிகள் பங்கேற்றனர் * கலெக்டர் தொடங்கி வைத்தார் திருவண்ணாமலையில் இருந்து ஜவ்வாதுமலைக்கு

திருவண்ணாமலை, மே 1: திருவண்ணாமலையில் இருந்து ஜவ்வாதுமலைக்கு பள்ளி மாணவர்கள் செல்லும் கோடைகால சிறப்பு இயற்கை சுற்றுலா பயணத்தை கலெக்டர் தொடங்கி வைத்தார். தமிழ்நாடு சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துறை மற்றும் திருவண்ணாமலை வனக்கோட்டம் இணைந்து, பள்ளி மாணவர்களுக்கு ஒரு நாள் சிறப்பு கோடைகால இயற்கை சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி, திருவண்ணாமலையில் இருந்து ஜவ்வாதுமலைக்கு பள்ளி மாணவர்கள் சுற்றுலா அழைத்துச் செல்லப்பட்டனர். அதன்படி, திருவண்ணாமலை, அடிஅண்ணாமலை, கண்ணக்குருக்கை, கலசபாக்கம், போளூர், மேல்பட்டு மற்றும் ஜமுனாமரத்தூர் பகுதிகளைச் சேர்ந்த 10 அரசு பள்ளிகளில் இருந்து 100க்கும் மேற்பட்ட மாணவ-மாணவியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்துகொண்டனர். இந்நிலையில், மாணவர்களின் சுற்றுலா பயணத்தை, திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் இருந்து கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தொடங்கி வைத்தார். ஜவ்வாதுமலையில் பீபன் அருவி, சிறுவர் பூங்கா உள்ளிட்ட பல்வேறு இடங்களை மாணவர்கள் பார்வையிடுகின்றனர். மாணவர்களுக்கு சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வு பாடங்களும், வனம் மற்றும் வன உயிரினங்கள் சார்ந்த கருத்துக்களும் விளக்கப்பட்டது. சுற்றுச்சூழல் சார்ந்த விளையாட்டுகள், வினாடி வினா, வார்த்தை புதிர்கள் உள்ளடங்கிய செயல்பாட்டு புத்தகங்கள் மாணவர்கள் வழங்கப்பட்டன. மேலும், சுற்றுலாவில் பங்கேற்ற மாணவர்களுக்கு டி-சர்ட், தொப்பி, புத்தகம், பேனா, பங்கேற்பு சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில், மாவட்ட வன அலுவலர் யோகேஷ்குமார் கார்க், உதவி வன பாதுகாவலர் வினோத்ராஜ், முதன்மை கல்வி அலுவலர் கணேஷ்மூர்த்தி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

The post கோடை கால இயற்கை சுற்றுலா * 100 மாணவ – மாணவிகள் பங்கேற்றனர் * கலெக்டர் தொடங்கி வைத்தார் திருவண்ணாமலையில் இருந்து ஜவ்வாதுமலைக்கு appeared first on Dinakaran.

Tags : Thiruvannamalai ,Javvadumalai ,Tiruvannamalai ,Tamil Nadu Department of Environment and Climate Change ,Vanakottam ,
× RELATED சிபிஐ இன்ஸ்பெக்டராக நடித்து ₹9.95 லட்சம்...